» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குருவாயூர் கோயிலில் மோடி பிரதமர் மோடி சுவாமி தரிசனம்: எடைக்கு எடை தாமரை துலாபாரம்

சனி 8, ஜூன் 2019 4:39:14 PM (IST)



கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை கொச்சியில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்த பிரதமர் மோடி, கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரை தரிசனம் செய்தார். கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் கோயில் குருக்கள் சிறப்பான கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தார். 

அவரது எடைக்கு எடையாக தாமரை மலர்களை கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கினார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலராகவும், அதே சமயம் பாஜகவின் சின்னமாகவும் அமைந்த தாமரை மலர்களை தனது எடைக்கு நிகராக வழங்கியுள்ளார் மோடி. பிறகு அபினந்த சபாவில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கட்சிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory