» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்: தமிழக மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திங்கள் 10, ஜூன் 2019 10:38:41 AM (IST)

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலையால் கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. கேரள மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றுமாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த அழுத்தநிலை காரணமாக தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குள் படிப்படியாக தீவிரம் பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக உருவெடுக்கும். 

இந்த புதிய புயல் சின்னம் காரணமாக, கன மழை அல்லது அதிகனமழை பெய்யும். குறிப்பாக, வடக்கு மலப்புரம் பகுதியிலும், கோழிக்கோடு பகுதியிலும் வரும் 12ஆம் தேதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் வெயிலின் தாக்கம் குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory