» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கத்துவா சிறுமி பலாத்காரம் -கொலை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு!

திங்கள் 10, ஜூன் 2019 5:36:42 PM (IST)

கத்துவா சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் குற்றவாளிகள் என்று பதான்கோட் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச்ச சேர்ந்த 8வயது சிறுமி,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி காணாமல் போனார். அதன்பின் 7 நாட்களுப்பின், அப்பகுதியில் உள்ள ஒரு காட்டில் சடலமாக, சிறுமி மீட்கப்பட்டார். விசாரணையில் அந்த சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத ஜம்மு காஷ்மீர் அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நாடுமுழுவதும் சிறுமியின் விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ரசானா கிராமத்தின் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர் ஆனந்த் தத்தா, ஆதாரங்களை அழிக்க முயன்ற இரு சிறப்பு போலீஸ் கான்ஸ்டபிள்கள், ஒரு துணை ஆய்வாளர் என 8 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடக்கத்தில் கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், அங்கு நடந்தால் விசாரணை நியாயமாக நடக்காது என்று வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, தடயவியல் ஆய்வு அறிக்கை ஆகியவற்றையும், சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குறிப்பிட்ட சிறுபான்மையினரை அந்த பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சதி திட்டத்துடன் இந்த சம்பவம் நடந்ததாக  விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்த விசாரணை முடிந்தது. இந்தநிலையில் விசாரணை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 7 பேரில் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory