» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீட்டில் இருந்தவாறு பணி செய்யக்கூடாது: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

வியாழன் 13, ஜூன் 2019 10:26:41 AM (IST)

"வீட்டில் இருந்தவாறு பணி செய்யக்கூடாது; சரியான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும்" என் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, அமைச்சர்கள் அனைவரும் காலந்தவறாமையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதன்படி அனைத்து அமைச்சர்களும் ஒழுங்காக அலுவலகத்துக்கு வரவேண்டும் எனவும், அதுவும் சரியான நேரத்துக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அலுவலகம் வந்தவுடன், புதிய பணிகள் குறித்து அமைச்சக அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வீட்டில் இருந்து பணி செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இணை அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக்கூறிய அவர், முக்கிய ஆவணங்களை இணை அமைச்சர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அமைச்சகத்தின் பரிந்துரைகளை கேபினட் மற்றும் இணை அமைச்சர்கள் இணைந்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் மக்களை சந்திப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும், இதில் அமைச்சர்களும், எம்.பிக்களும் ஒரே மாதிரிதான் எனவும் அவர் உறுதிபட கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory