» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் கோடை வெயிலின் கொடுமை மூளைக் காய்ச்சலால் 54 குழந்தைகள் பலி!!

வெள்ளி 14, ஜூன் 2019 5:02:24 PM (IST)பீகார் மாநிலத்தில் வெயிலின் கொடுமையால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, 54 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மத்திய அரசு முசாஃபர் நகர் மாவட்டத்துக்க மத்திய குழு ஒன்றை அனுப்பி உள்ளது. 

பீகார் மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம், ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் கடந்த சில வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை குழந்தைகள் உயிரிழப்பு 54 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட குழந்தைகள் அனைவருக்கும் ‘கைபோகிலைசிமியா’ என்ற ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ள நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு ஒரு மருத்துவக் குழுவை முசாஃபர் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.

உயிரிழந்த அனைத்துக் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குழந்தைகள் இறப்பது முசாஃபர் நகருக்கு புதியது ஒன்றும் கிடையாது. இதுபோன்று பல வருடங்களாக நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. மாவட்டத்தில், கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இறந்தவர்களில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளே அதிகம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மூளைக் காய்ச்சலால் அதிக குழந்தைகள் இறந்துள்ளனர். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும் பெரும் காரணமாக இருக்கிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும்போது இந்த இறப்பு வெகுவாக குறைகிறது. இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory