» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமானத்திலிருந்து உணவு பொருட்களை வெளியே எடுத்து வர தடை: ஏர் இந்தியா நடவடிக்கை!

வெள்ளி 14, ஜூன் 2019 5:33:32 PM (IST)

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து உணவு பொருட்களை வெளியே எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஏர் இந்தியா விமானத்துக்குள் பயணிகளுக்கு வழங்கப்படாத உணவுகள் மற்றும் உலர்ந்த உணவுப் பொருட்களை 4 ஊழியர்கள் திருடி வந்ததை ஏர் இந்தியா நிர்வாகம் கண்டுபிடித்தது. இதுபோன்று பல முறை நடந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்து உணவு பொருட்களை வெளியே எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால், விமானத்துக்குள் இருந்து, எந்தவொரு ஊழியரும், தனது சொந்த உணவுப் பொருள் மற்றும் உணவு டிரேவையும் கூட வெளியே கொண்டு வர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் எந்த செயலையும் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் ஏர் இந்தியா விமானம், விமானத்துக்குள் இருந்து குளிர்பானம், உணவுப் பொருட்கள் என எதையும் ஊழியர்கள் கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மதுபானம், விமானத்தில் வழங்கப்படும் மற்ற பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory