» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் பரிசு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

சனி 15, ஜூன் 2019 4:03:33 PM (IST)குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திரா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். ரே‌ஷன் பொருட்கள் வீட்டுக்கு நேரடியாக வரும் என்பது போன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையே கல்வி அறிவில் ஆந்திர மாநிலம் 100 சதவீதம் அடைய வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, ராஜண்ணாபடி பாட்டா என்ற கல்வி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 

அது போன்று முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, மதபேதமின்றி அசுஷ் ராப்யசம் என்ற திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குண்டூரில் உள்ள அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு எழுத்து கற்பிக்கும் நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.அப்போது அவர் குழந்தைகளின் கையை பிடித்து எழுத்துகளை எழுத கற்று கொடுத்தார். ஆந்திராவில் கல்விப் புரட்சியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் முற்றிலும் மாற்றியமைக்கப்படும். பள்ளிகளுக்கு செல்லாத பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும். இந்த திட்டம் வருகிற குடியரசு தினத்தில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory