» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகள் மறுப்பு: தெலுங்கு தேசம் கட்சி கண்டனம்

ஞாயிறு 16, ஜூன் 2019 9:31:33 AM (IST)விஜயவாடா விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தராததற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்கிறார்கள். இந்நிலையில், நேற்றிரவு அவர் விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடு இசட்பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் நேரடியாக விஐபிக்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார்.

ஆனால், விஜயவாடா விமானநிலைய பாதுகாப்பு படையினர் அவருக்கு நேரடியாக செல்லும் விஐபி அந்தஸ்தை கொடுக்க மறுத்தனர். ஆந்திர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் விமான நிலையத்துக்குள் இனி சலுகைகள் தர இயலாது. பரிசோதனைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு தனது காரில் இருந்து இறங்கி பயணிகளோடு பயணியாக வரிசையில் போய் நின்றார். மற்ற சாதாரண பயணிகள் ஸ்கேன்கருவி கடந்த செல்வதுபோல அவரும் கடந்து சென்றார். அப்போது விமான நிலைய பாதுகாப்புப்படை வீரர் அவரை முழுமையாக பரிசோதித்தார். அதன்பிறகே அவர் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.

விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடம்வரை விஐபி வாகனத்தில் செல்ல சந்திரபாபு நாயுடு அனுமதி கேட்டார். ஆனால் அந்த சலுகையையும் பாதுகாப்பு படையினர் தர மறுத்தனர். எல்லா பயணிகளையும் போல அவரும் பயணியோடு பயணியாக விமான நிறுவனத்தின் பஸ்சில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டார். சந்திரபாபு நாயுடுக்கு சலுகைகள் தராததற்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய- மாநில அரசுகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory