» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக செயல்தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்: தமிழக துணை முதல்வர் ஓபிஸ் வாழ்த்து

செவ்வாய் 18, ஜூன் 2019 5:45:58 PM (IST)

பாஜக செயல்தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் நாடாளுமன்ற போர்டு கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பாஜகவின் செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா நேற்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டரில் பாஜக முதல் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு அதிமுக கட்சியின் சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களது நேர்த்தியான தலைமையின் கீழ் பாஜக இனிவரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை எட்டும் என நம்புகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory