» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் தனியாருக்கு அனுமதி : மத்திய அரசு முடிவு

புதன் 19, ஜூன் 2019 4:21:34 PM (IST)

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் தனியாருக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

பயணிகள் போக்குவரத்தில் பஸ், விமானம், கப்பல் சேவைகளில் அரசு மட்டுமின்றி தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரயில்வே போக்குவரத்தில் மட்டும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரயில்வே அமைச்சகமும் தனி பட்ஜெட் தயாரித்து, அந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டுள்ளது. உலகின் 4-வது பெரிய ரயில்சேவையான இந்தியன் ரயில்வேயில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 69 ஆயிரத்து 182 கி.மீ. தொலைவுக்கு இருப்புபாதையை கொண்ட இந்திய ரயில்வே தினமும் நூற்றுக்கணக்கான ரயில்வே சேவைகளை இயக்கி வருகிறது.

பல கோடி பேர் தினமும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரயில்கள் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய ரயில் வேக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல புதிய வழித்தடங்கள் அமைத்து வருவாயை பெருக்க முடிவு செய்துள்ளனர். அதிவேக ரயில் சேவைகளையும் கொண்டு வர உள்ளனர்.

இந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரயில்வேக்கு எந்தெந்த வழிகளில் வருவாயை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு நடந்து வருகிறது.அந்த அடிப்படையில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது போல குறைந்த வருவாயை தரும் சுற்றுலாதலங்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் இது தொடர்பான ஏலத்தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஏலத்தொகை கேட்கும் தனியாருக்கு, பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ரயில் சேவையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு பயணிகள் ரயிலையும், ஒரு சுற்றுலா ரயிலையும் தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அடுத்து ரயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்த தனியார், அந்த ரயிலுக்கு புதிய பெயரை சூட்டிக் கொள்ளலாம். ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படும்.

அந்த ரயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பில் விடப்படும் டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும். இந்த திட்டத்தால் தனியார் ரயில்களை இயக்குவதோடு, ரயில்வே அமைச்சகத்துக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று தனியாருக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory