» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம்: காங். உள்ளிட்ட புறக்கணிப்பு

புதன் 19, ஜூன் 2019 5:12:54 PM (IST)

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

பாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம். ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

இதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். அவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory