» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காட்டுத்தீ அணைய மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் : உச்சநீதிமன்றம் அறிவுரை

புதன் 19, ஜூன் 2019 5:45:59 PM (IST)

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் காட்டுத்தீ அணைய மழைக்காக பிரார்த்தனை செய்யும் படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் காற்றுத் தீயால் அரியவகை உயிரினங்களும் வனப்பகுதிகளும் அழிவதாக கூறி வழக்கறிஞர் ரிதுபர்ண உனியால் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். காட்டுத்தீயில் இருந்து வனத்தையும் உயிரினங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார். 

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் வழக்கறிஞருமான உனியால் நேரில் ஆஜராகி மனுவை  உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மனுக்களுடன் பட்டியலிட வேண்டும் என்று கூறினார். அப்போது காற்றுத் தீ என்பது மிக தீவிரமான பிரச்சனை என்ற நீதிபதிகள், மனு மீது இந்த மாதம் 24ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினர். மனு மீதான விசாரணை நடைபெறும் காலம் வரை, காட்டுத்தீ அணைய மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

தமிழன்Jun 20, 2019 - 11:30:30 AM | Posted IP 162.1*****

இங்க ஒருத்தர் - பத்து சிலை வைத்தேன் என்று பீற்றிக்கொண்டு அலைந்தார் - அப்ப என்ன செஞ்சீங்க

சாமிJun 20, 2019 - 09:35:49 AM | Posted IP 162.1*****

தம்பி சொல்வது நீதிமன்றம் - உன் ஒப்பாரியை அங்கே சொல்லு

ஒருவன்Jun 19, 2019 - 06:54:02 PM | Posted IP 162.1*****

மேலை நாடுகளில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மூலாமா நீர் கொண்டு வந்து அணைப்பார்கள் .. இங்கே அதே மாதிரி செய்யமாட்டாராம் , 3000 கோடி க்கு படேல் சிலை வைப்பாராம் , அடுத்து ராமர் சிலை அமைக்க போறாராம் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory