» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செயலி : ரிசர்வ் வங்கி கவர்னர் தொடங்கி வைத்தார்.

செவ்வாய் 25, ஜூன் 2019 9:00:38 AM (IST)

வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செயலியை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார்

வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ‘புகார் மேலாண்மை அமைப்பு’ (சி.எம்.எஸ்.) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும். வங்கிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும், அவர்களது குறைகளை தீர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தவுடன் தானாகவே ஒப்புதல் தகவல் கிடைக்கும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிலைத்தகவலும் பின்னர் அதில் வெளியிடப்படும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் அதில் வசதி செய்யப்பட்டு இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

CustomerJun 25, 2019 - 11:43:27 AM | Posted IP 162.1*****

Employees of the State Bank Main Branch do not perform the work properly. Because, delaying and wasting the clients' time. Please do them working properly and save the time to customer. Kindly take the necessary action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory