» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது

புதன் 26, ஜூன் 2019 5:50:41 PM (IST)



மத்திய பிரதேசத்தில் நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியாவை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.க. தேசிய பொது செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. எம்.எல்.ஏ.வான இவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. மத்தியப்பிரதேசத்தில் நகராட்சி பணியாளர் ஒருவரை கிரிக்கெட் பேட் ஒன்றை கொண்டு தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே அதிகாரி ஒருவரை ஆகாஷ் தாக்குகிறார். 

எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ம.பி.யில் நகராட்சி பணியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆகாஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory