» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு

செவ்வாய் 9, ஜூலை 2019 5:52:05 PM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பிறந்தநாளுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களையும் அமெரிக்க டாலர்களையும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதாவும் அழகு திருநாவுக்கரசுவும் இறந்துவிட்ட நிலையில், 23 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை சி.பி.ஐ. தரப்பு தாமதமாக கையாண்டதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி அமைச்சர் செங்கோட்டையனை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. அதன் மூலம் வழக்கும் தள்ளுபடியானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory