» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டலில் தஞ்சம்: சமாதானத்தற்கு வந்த அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

புதன் 10, ஜூலை 2019 11:13:05 AM (IST)அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வந்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளில் கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ராஜினாமா கடிதங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அந்த ஓட்டல் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். எம்எல்ஏக்களை இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று மும்பை விரைந்தார். மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றார்.ஆனால், டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமாரை திரும்பி போகும்படி கூறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களும், டிகே சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை. முதல்வர் மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், அமைச்சர் டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.அவரை பிரதான வாயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச்சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.ஓட்டல் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"எனது நண்பர்கள் ஓட்டலில் தங்கியுள்ளனர். என்னால், எம்எல்ஏக்களுக்கு ஆபத்து எப்படி நேரிடும்?. இது எங்கள் குடும்ப பிரச்சனைதான். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனக்கு எதிராக இங்கு முழக்கங்கள் எழுப்புவர்கள் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை. எனக்கு அச்சமும் இல்லை. பாஜகவுக்கு இந்த பிரச்சனையில் சம்பந்தம் இல்லை என்றால், ஏன் இங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory