» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அவைத் தலைவர்களுக்கு நீதிமன்றங்கள் அறிவுறுத்த முடியாது: கர்நாடக சபாநாயகர் மேல்முறையீடு

வியாழன் 11, ஜூலை 2019 4:04:02 PM (IST)

அவைத் தலைவர்களுக்கு நீதிமன்றங்கள் அறிவுறுத்த  முடியாது என  கர்நாடக சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மேல் மேல்முறையீடு செய்துள்ளார். 

அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரின் ராஜினாமா கடிதம் மீது இன்றே முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் மேல்முறையீடு செய்துள்ளார். பேரவைத் தலைவர்களுக்கு எந்த நீதிமன்றங்களும் அறிவுறுத்த முடியாது என்று கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். 

முன்னதாக், தாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி 10 கர்நாடக எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதம் கொடுத்த 10 எம்எல்ஏக்களும் அவைத் தலைவர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எம்எல்ஏக்களுக்கும், எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று அவைத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

சேகர்Jul 11, 2019 - 04:24:53 PM | Posted IP 162.1*****

சபாஷ் கர்னாடகா P H பாண்டியா !!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory