» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனையில் கட்டணங்கள் ரத்து : எஸ்பிஐ அறிவிப்பு

வெள்ளி 12, ஜூலை 2019 3:54:48 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி கட்டண ரத்து சலுகையை அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு டிஜிட்டல் முறையில் அதாவது ஐஎம்பிஎஸ்-ல் பணப்பரிமாற்றம் செய்யும் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 

இந்த கட்டண ரத்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ செயலி, இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் போது இந்த கட்டண ரத்து நடைமுறைக்கு வரும். முன்னதாக, என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை ஜூலை 1ம் தேதியோடு ரத்து செய்து நடைமுறைப்படுத்திய நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனைத்து விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் ரத்து செய்யப்படுகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி இந்த சலுகையை அறிவித்துள்ளது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory