» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை மோடி அரசு ஒரு போதும் தவறாக பயன்படுத்தாது: அமித்ஷா உறுதி

திங்கள் 15, ஜூலை 2019 5:45:36 PM (IST)

மோடி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

வெளிநாட்டிலுள்ள இந்தியர்களையும், இந்திய நலன்களையும் குறிவைத்து நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு  கூடுதல் அதிகாரம் அளித்து 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த மசோதவுக்கு 278 பேர் ஆதரவு அளித்து உள்ளனர்.

என்ஐஏ  தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா  திருத்தம் தொடர்பாக உள்துறை அமைச்சருக்கும், எய்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கும் இடையே விவாதம் நடந்தது.  அப்போது பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,   நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என்று தெரிவித்தார். ஆனால் நாட்டில் பயங்கரவாதத்தை  ஒடுக்க  இது பயன்படுத்தப்படும் என கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory