» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

செவ்வாய் 16, ஜூலை 2019 12:45:10 PM (IST)

கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கௌடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, நாராயண கௌடா, விஸ்வநாத், கோபாலய்யா, சோமசேகர், பி.சி. பாட்டீல், பைரதி பசவராஜ் உள்ளிட்ட 10 பேர் பதவியை ராஜிநாமா செய்தனர். இருப்பினும், அதை சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 10 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்தனர். 

இதன்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 16ஆம் தேதி மனு விசாரிக்கப்படும், அதுவரையிலும் ராஜிநாமா மீது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டது. இதனிடையே, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்களான ஆனந்த் சிங், கே. சுதாகர் ரெட்டி, என். நாகராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளனர். அதில் தங்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு, 5 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, நிலுவையில் உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, 5 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவையும் இன்று விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வநத்தது. அப்போது எம்எல்ஏக்களின் ராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் எனக் கேள்வி எழுதிய நீதிபதி சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்க உத்தரவிட முடியாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory