» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலி : தபால் துறை தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு!!

செவ்வாய் 16, ஜூலை 2019 3:55:53 PM (IST)

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் அமளி எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தபால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கபபட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் நேற்றைய தினம் மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை ரத்தும்படி வலியுறுத்தினர்.

இந்நிலையில் ராஜ்யசபா இன்று காலை கூடியதும் அதிமுக எம்பிக்கள் இந்த பிரச்சினையை மீண்டும் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். எனினும் அதிமுக எம்பிக்கள் சமாதானம் அடையாமல் அமளியில் ஈடுபட்டனர். தபால் துறை தேர்வை தமிழில் நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிப்பார் என கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

இதனால் மீண்டும் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக எம்பிக்களின் தொடர் எதிர்ப்பால் மாநிலங்களவை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும். எனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார் ரவிசங்கர் பிரசாத். தமிழக எம்பிக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory