» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி: பீகார் அரசு சலுகைகள் அறிவிப்பு

செவ்வாய் 16, ஜூலை 2019 4:24:01 PM (IST)

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவியை பீகார் அரசு அறிவித்துள்ளது.

பீகாரில் மூன்றாம் பாலினத்தவருக்காக ஒருங்கிணைக்கப்படும் கின்னார் மஹோத்ஸவா விழாவை துவக்கிவைத்துப் பேசிய அம்மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, "மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் அவர்களுக்கு அரசு ரூ.1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். மூன்றாம் பாலினத்தவர் என்பதாலேயே அவர்களுக்கு வாடகை வீடு மறுப்பவர்களுகும், மருத்துவ சிகிச்சை மறுப்பவர்களுக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார்.

மேலும் பேசும்போது, "புதிதாக அமைக்கப்பட்டுள்ள பீகார் ராஜ்ய கல்யாண் வாரியம் (Bihar State Transgender Welfare Board) பிற மாநிலங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து ஆராய்ந்து அவற்றில் ஏதேனும் இங்கு விடுபட்டிருந்தால் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்" என்றார். பீகாரில் மட்டும்தான் மூன்றாம் பாலினத்தவருக்காக அரசு சார்பில் ஒரு விழா ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory