» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி - 40க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!!

செவ்வாய் 16, ஜூலை 2019 5:03:52 PM (IST)மும்பையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மும்பை டோங்கிரியில் இன்று காலை 11.40 மணியளவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளிடையே சுமார் 40-க்கு மேற்ப்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீ அணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory