» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

சனி 20, ஜூலை 2019 5:15:12 PM (IST)

டெல்லி முன்னாள் முதல்-அமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முன்னாள் முதல்-அமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.  அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஷீலா தீட்சித். 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

இந்நிலையில்  டெல்லி முன்னாள் முதல்-அமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார். கட்சி எல்லைகளை தாண்டி அனைவராலும் மதிக்கத்தக்க தலைவர் ஷீலா தீட்சித். டெல்லி முன்னாள் முதல்-அமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory