» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு

ஞாயிறு 21, ஜூலை 2019 4:56:01 PM (IST)இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த  சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நடைபெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தின்போது அக்கட்சிக்கு புதிய தேசிய பொதுச் செயலாளராக யாரை நியமிக்கலாம்? என விவாதிக்கப்பட்டது.

தற்போது பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக இருக்கும் மூத்த தலைவரான டி.ராஜாவின் பெயர் இதற்காக ஒருமனதாக முன்மொழியப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949 அன்று பிறந்த டி.ராஜா (எ) டேனியல் ராஜா 1994 முதல் அக்கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

சாமிJul 21, 2019 - 05:52:37 PM | Posted IP 162.1*****

தேசிய அளவில் கெட்ட கட்சிக்கு காலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory