» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாலைகள் அமைக்க ரூ. 1.25 இலட்சம் கோடி எல்.ஐ.சி. கடன்: அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

ஞாயிறு 21, ஜூலை 2019 5:24:24 PM (IST)

ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாயை சாலைகள் அமைக்க கடனாக வழங்க ஆயுள் காப்பீட்டு கழகம் முன்வந்துள்ளது 

இந்த தகவலை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி டெல்லியில் வெளியிட்டார். பாரத மாலா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்க ரூபாய் 8.41 லட்சம் கோடி தேவைப்படுகிறது. சாலை திட்டங்களை உரிய காலத்திற்குள் அமைக்காவிட்டால், திட்டச் செலவு அதிகரித்துவிடும். சாலைகள் அமைக்க இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) 1 ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் சாலைகள் அமைக்க கடனாகக் கிடைக்கும்.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழக தலைவர் ஆர். குமார், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கட்கரியை புதுதில்லியில் சென்ற வாரம் சந்தித்துப் பேசும் பொழுது ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடன் வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார். பாரத் மாலா சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் துவக்கத்தில் மொத்த செலவு மதிப்பீடு ரூபாய் 5.35 லட்சம் கோடியாக இருந்தது. பின்னர் நில ஆர்ஜித செலவு உயர்ந்த காரணத்தினால் இந்த செலவுத்தொகை உயர்த்தப்பட்டது. இப்பொழுது 8.41 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கு திரட்டப்படும் நிதி 30 ஆண்டுகளில் திருப்பி அளிக்கப்படும் இந்த கடன் தொகையை உரிய வட்டி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்து உயர்த்தப்படும் என கட்கரி தெரிவித்தார்.

ஆயுள் காப்பீட்டுக் கழகம் தவிர வங்கிகளும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு கடனுதவி வழங்க முன்வந்துள்ளன. இதுதவிர பொதுமக்களின் முதலீட்டு திட்டங்கள் தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம், பிராவிடண்ட் ஃபண்ட் திட்டம் ஆகியவற்றில் இருந்தும் கடன் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கட்காரி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory