» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மின்சார கட்டணம் ரூ. 128 கோடி? முதியவர் அதிர்ச்சி

ஞாயிறு 21, ஜூலை 2019 5:29:50 PM (IST)

உத்தரபிரதேசத்தில் ரூ.128 கோடி மின்சார கட்டணம் செலுத்தும்படி முதியவர் ஒருவருக்கு பில் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். சமீபத்தில் இவர் வீட்டுக்கு மாதாந்திர மின்சார கட்டணத்திற்கான பில் வந்துள்ளது. அதில் அவர் ரூ.128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். ஷமீம் ரூ.128 கோடி மின்சார கட்டணத்தைத் செலுத்தாதால் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. 

இதுகுறித்து ஷமீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  நாங்கள் எங்கள் வீட்டில் மின் விசிறி மற்றும் குழல் விளக்கு பயன்படுத்துகிறோம். எப்படி எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை வர முடியும்? நாங்கள் இந்த தொகையை எப்படி செலுத்த முடியும்? சராசரியாக ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.700 அல்லது ரூ. 800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். எனது வேண்டுகோளை ஒருவரும் கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான மின்கட்டணத்தைக் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை எனக்கு அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் மே மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் காய்கறி கடை வைத்திருக்கும் ஜெகன்னாத் என்பவருக்கு ரூ. 8.64 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இதுதொடர்பாக அவர் மின் வாரியத்திற்கு பலமுறை அலைந்து திரிந்தும் பலனில்லாத நிலையில், மனஉளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது பில்லில் தசம புள்ளி விடுபட்டு போனதில் நடந்த தவறு என்று கூறிய மின்சாரவாரியம் வேலையை சரியாகச் செய்யாத கணக்கு உதவியாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.


மக்கள் கருத்து

அருண்Jul 22, 2019 - 09:56:37 PM | Posted IP 157.5*****

கொடுமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory