» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீரைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளை கொல்லுங்கள் - ஆளுநர் சர்ச்சை பேச்சு!!

திங்கள் 22, ஜூலை 2019 12:09:19 PM (IST)

"காஷ்மீரைக் கொள்ளையடித்த அரசியல் தலைவர்களைக் கொல்ல வேண்டியதுதானே, எதற்காக அப்பாவி பொதுமக்களைக் கொல்கிறீர்கள்?" என்று காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கார்கிலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யபால் மாலிக், "துப்பாக்கித் தூக்கியவர்கள் தங்கள் சொந்த மக்களையே கொல்கின்றனர். அவர்கள் பாதுகாப்புப் படையினரைக் கொல்கின்றனர். ஏன் இவர்களைக் கொல்கிறீர்கள்? காஷ்மீர் வளங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள், அவர்களில் யாரையாவது இதுவரை கொன்றிருக்கிறீர்களா?” என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. காஷ்மீரை ஆண்ட அரசியல் குடும்பங்கள் பெரிய அளவில் சொத்துக்களை குவித்துள்ளன, பயங்கரவாதம் ஏன் அவர்கள் மீது பாயவில்லை என்று கேட்கிறார் சத்யபால் மாலிக். "இந்திய அரசு ஒருக்காலும் துப்பாக்கிக்கு அடிபணியாது” என்றார். 

"காஷ்மீரை ஆண்ட பெரிய குடும்பங்கள் வரம்பற்ற செல்வ வளங்களை சேர்த்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீநகரில் ஒருவீடும், டெல்லியில் ஒரு வீடும் துபாயில் ஒருவீடும் லண்டனில் வீடு என்றும் சொத்துக்களை குவித்தனர். பெரிய பெரிய ஹோட்டல்களில் இவர்கள் பங்குதாரர்கள்” என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓமர் அப்துல்லா, "இந்த ட்வீட்டை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இனி காஷ்மீரில் மைய நீரோட்ட அரசியல்வாதிகள் யாராவது கொல்லப்பட்டால் அது ஆளுநரின் உத்தரவினாலேயே இருக்கும். ஒரு அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் போன்றவர் தீவிரவாதிகள் அரசியல் வாதிகளை கொல்ல வேண்டும் என்கிறார், இவரைப் போன்றவர்களுக்குத்தான் டெல்லியில் செல்வாக்கு பெருகி வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory