» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கிகளில் பணம் பரிவர்த்தனைக்கு ஆதார் எண் கட்டாயம் : மத்திய அரசு திட்டம்

செவ்வாய் 23, ஜூலை 2019 8:57:31 AM (IST)

ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் பான் எண்ணை மட்டுமின்றி  ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிட வேண்டும். இதற்கான உத்தரவை விரைவில் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

நாட்டில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் (கரன்சி) பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும்ன்போது மின்னணு கேஒய்சி, பயோமெட்ரிக் கருவி, ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, நிதி மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்நிய செலாவணி வாங்கும்போது, தற்போது பான் எண்ணை குறிப்பிட்டால் போதும், இதேபோல், சொத்து வாங்கும்போதோ, விற்கும்போதோ சாதாரணமாக ஆதார் அல்லது பான் எண் குறிப்பிட்டால்போதும். 

இனிமேல் இதுபோதாது. வாங்கிய சொத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணை உறுதிப்படுத்துவது கட்டாயமாகிறது. எவ்வளவு பண பரிவர்த்தனை செய்தால் ஆதாரை உறுதிப்படுத்துவது கட்டாயம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முடிவு செய்ததும் அறிவிக்கப்படும். ஆண்டுக்கு வங்கியில் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரையில் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ ஆதார் அடையாளத்தை உறுதிப்படுவது கட்டாயம் என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  பல டெபாசிட்தாரர்கள் பண பரிவர்த்தனையின்போது தவறான பான் எண் குறிப்பிடுகின்றனர். இதனால், பணப் பரிவர்த்தனைகளை முறையாக கண்டறிய முடியவில்லை ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் போலியான பான் எண்ணை மட்டும் குறிப்பிட்டு தப்பிக்க முடியாது என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory