» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாடு இறை மறுப்பாளர்களின் பூமி அல்ல; இறைவனின் பூமி: விஷ்வ ஹிந்து பரிஷத்

செவ்வாய் 23, ஜூலை 2019 10:46:07 AM (IST)

"தமிழ்நாடு இறை மறுப்பாளர்களின் பூமி அல்ல இறைவனின் பூமி, அத்திவரதரை தரிசிக்கத் லட்சக்கணக்கானோர் திரள்வதே அதற்கு சாட்சி" என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் சுரேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆதி காலத்தில் இருந்து இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் மையப் புள்ளியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. காஞ்சிபுரத்தில் ஆதி காலத்தில் இருந்த பல்கலைக்கழகம் சம்ஸ்கிருத கற்பதற்கான பிரதான மையமாக இருந்தது. இந்தியாவிலேயே மிகப் பெரிய கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. 

தமிழ்நாடு இறைவனின் பூமி. இறை நம்பிக்கையாளர்களின் பூமி. ஆனால், கடந்த சில காலமாக தமிழ்நாட்டை இறை மறுப்பாளர்களின் பூமி என்று சிலர் தவறாகக் கதை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு இறைமறுப்பாளர்களின் பூமி என்றால், தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க மாட்டார்களே? உண்மையில், வட மாநிலங்களில் உள்ள கோயில்களைவிட தமிழகத்தில் உள்ள கோயில்கள்தான் பிரமாண்டமானவை. அங்குள்ள பிரமாண்டமான கோயில்கள் போல வடமாநிலங்களில் இல்லை.
 
மேலும், "லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற குரானிலுள்ள வசனத்தை தனது காலைப் பிரார்த்தனையில் கூறுவதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும் அந்த வசனம் இந்துக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வசனத்தின் உண்மையான பொருள் தெரியாமல்தான் தனது காலைப் பிரார்த்தனையில் பியூஷ் கோயல் கூறிவருகிறார் என நினைக்கிறேன். இது தொடர்பாக பொது வெளியில் பேசும் போது அவர் கவனமாக இருக்க வேண்டும் என அவருக்கு யோசனை கூறுகிறேன் என்றார் அவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory