» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு 162 பேர் பலி

சனி 10, ஆகஸ்ட் 2019 4:59:07 PM (IST)



கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்தc பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.  இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மொத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory