» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: ஆளுநர் அறிவிப்பு
புதன் 14, ஆகஸ்ட் 2019 10:53:32 AM (IST)

சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவனர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலையும் ஆளுநர் சத்யபால் மாலிக் மறுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: பிரபல தொழில் அதிபர் பெருமை
வியாழன் 12, டிசம்பர் 2019 5:29:18 PM (IST)

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
வியாழன் 12, டிசம்பர் 2019 5:10:38 PM (IST)

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:03:26 PM (IST)

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
வியாழன் 12, டிசம்பர் 2019 3:42:55 PM (IST)

குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் அச்சப்பட வேண்டாம்: பிரதமர் மோடி
வியாழன் 12, டிசம்பர் 2019 10:41:34 AM (IST)

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 10:38:04 AM (IST)
