» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தம் : ரகுராம் ராஜன் யோசனை

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 9:07:23 AM (IST)

பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்து விட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நுகர்வோர் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அத்துறையினர் ஊக்கச்சலுகை கேட்கிறார்கள். இந்த நேரத்தில், பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன் பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கை. மின்சார துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும்வகையில் சீர்திருத்தம் இருக்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச்சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதுபோல், நாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். சரியான கண்ணோட்டத்துடன் அதை மதிப்பிட வேண்டும். 2008-ம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சினைகளை களைந்தாலும், புதிய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாது. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory