» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காதலுக்கு தடை விதித்த தந்தையைக் கொடூரமாக கொன்று எரித்த மாணவி : பெங்களூருவில் பயங்கரம்!

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 4:13:42 PM (IST)

பெங்களூரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தந்தையைக் கொடூரமாக கொன்று எரித்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய்குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 18-வயதாகும் பிரவீன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மகளை ஜெய்குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவி, ஆண் நண்பருடன் ஊர் சுற்ற தடையாக உள்ள தந்தையை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியுள்ளார். 

இதுகுறித்து ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். அவனும் சம்மதம் தெரிவித்துள்ளான். தந்தையை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மாணவி. அதற்கு நேற்று வாய்ப்பு அமைந்தது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு திருமண விழாவிற்கு ஜெய் குமார் தனது மனைவி மற்றும் மகனை ரயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார். தனியாக வீட்டில் இருக்கும் தந்தையை கொலை செய்த இதுவே சரியான நேரம் என்று கருதிய அந்த மாணவி, தந்தையிடம் அன்பாக பேசியுள்ளார். அப்போது தூக்க மாத்திரை கலந்து பாலை குடியுங்கள் என்று கொடுக்க, மகள்தானே தருகிறாள் என்று, மகளின் கொடூர திட்டத்தை அறியாத தந்தை குடித்துள்ளார். 

குடித்ததும் ஜெய் குமார் மயக்கம் அடைய, அந்த மாணவி தனது ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் தந்தையை சராமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், குளியல் அறைக்குள் உடலை இழுத்துச் சென்று தீவைத்து கொளுத்தியுள்ளார்.  புகை வெளியில் வர அருகில் வசித்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்கும்போது பாதி எரிந்த நிலையில் ஜெய் குமார் பிணமாக கிடந்தார். பின்னர் இருவரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். 10-ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பருடனான தொடர்புக்காக தந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory