» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோ தலைவர் சிவனின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் போலியானவை: இஸ்ரோ தகவல்!

திங்கள் 9, செப்டம்பர் 2019 4:56:51 PM (IST)

இஸ்ரோவின் தலைவர் சிவனின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்றும் அவைகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான் -2 விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 48 நாட்கள் பயணத்திற்கு பின்னர், கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் பகுதியை அடைந்தது. அப்போது ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரம், நிலவுக்கு மேலே 2.1 கிமீ தொலைவில் உள்ள போது, சிக்னல் கிடைக்காமல் போனது. 

இந்த சமயத்தில், சிக்னல் கிடைக்கவில்லை என்று தழுதழுத்த குரலில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் பிரதமர் மோடியிடம்  பேசும்போது கதறி அழுதார். உடனே பிரதமர், சிவனை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டுமின்றி, சிவனுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கைலாசவடிவூ சிவன் என்ற அவரது பெயரிலும், இஸ்ரோவின் பெயரிலும் ட்விட்டரில் உள்ள சில கணக்குகளில் தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தது. 

இதையடுத்து,  இஸ்ரோ மற்றும் சிவனின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகள் போலியானவை என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சிவனுக்கு இதுவரை தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இல்லை என்றும், அவரது பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory