» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம்: ரயில்வே வாரியம்

திங்கள் 9, செப்டம்பர் 2019 8:42:37 PM (IST)

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.ரயில்வேயின் இந்த நடவடிக்கை ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஒழிக்கும் முயற்சியென்று தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

சென்னையில் போராட்டமும் நடைபெற்றது.இந்நிலையில் ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.இது குறுத்து ரயில்வேயின் அனைத்துப் பிராந்திய பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என்று  ரயில்வே வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory