» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எந்த வங்கியாக இருந்தாலும், தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம்: புதிய சேவை அமல்

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:30:31 PM (IST)

எந்த வங்கியாக இருந்தாலும், இனி தபால் நிலையங்களிலும் பணம் எடுக்கலாம் என ஒரு புதிய சேவை அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் வரை தபால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் தபால் நிலைய வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உங்கள் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே தபால் நிலையங்களில் பணம் எடுக்கமுடியும். கடந்த 1 ஆம் தேதி இந்த சேவை அமலுக்கு வந்தது. 

தற்போது இந்த சேவையை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அறிவித்தார். மேலும் தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு ரவிஷங்கர் பிரசாத் விருது வழங்கினார். தபால் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கான கோன் பனேகா பாகுபலியின் முதல் இடத்திற்கான விருதை தமிழகம் பெற்றது. மேலும் டிஜிட்டல் கிராமம் திட்டத்தில் 3 ஆவது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory