» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வியாழன் 12, செப்டம்பர் 2019 3:56:16 PM (IST)

பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அங்கு அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றளவும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முழுவதுமாக திரும்பவில்லை.
 
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், "சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள அண்ணா மாநாட்டுக்காக பரூக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்ற நிதிபதி ரமணா அமர்வில் வைகோ தரப்பில் இன்று முறையிடப்பட்டது. ஆனால் வைகோவின் மனுவை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மனுவை எப்போது விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்றும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory