» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் 40 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தம்

வியாழன் 19, செப்டம்பர் 2019 5:01:57 PM (IST)மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடுமுழுவது இன்று 40 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம், ஒட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் சாலை விதி மீறல்களுக்கு அபராத தொகையாக 10 மடங்கு உயர்த்தியது. இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இதனால் நாமக்கல்லில் லாரிகள் உரிமையாளர் சங்க வளாகத்திலும், சேலத்தில் லாரி மார்க்கெட்டிலும், சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், மார்பிள் மற்றும் கிராணைட் கற்கள் வரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory