» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்? இஸ்ரோ அமைப்பு ஆய்வு

வியாழன் 19, செப்டம்பர் 2019 7:58:29 PM (IST)

சந்திராயன் 2 செயற்கைகோளில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் வட துருவத்தில் இறங்கி ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரானது, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க வேண்டிய தருணத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அதையடுத்து அதனுடனான தொடர்பினை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறு வந்தது. செப்டம்பர் 21-ஆம் தேதி வரைதான் நிலவின் குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்பதால் அதற்குள் ஏதாவது தகவலைப் பெற தீவிர முயற்சிகள் நடந்து வந்தது,

இந்நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து   ஆய்வு செய்து வருவதாவும் தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory