» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் இ சிகரெட்டுகளுக்கு தடை: அவசர சட்டத்திற்கான அரசாணை மத்திய அரசு வெளியீடு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:25:21 AM (IST)இந்தியாவில் இ சிகரெட்டுகள் விற்பனை, ஏற்றுமதி, உற்பத்தி ஆகியவற்றிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கான அரசாணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இந்தியா முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, இறக்குமதி என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இ சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கான அரசாணையை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.இ சிகரெட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் 2019, சமீபத்தில் அமைச்சரவை குழுவால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அமைச்சரவை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை முதல்முறை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 20, 2019 - 12:50:28 PM | Posted IP 162.1*****

ஆமாம் .. மற்ற சிகரெட்டுகளில் மருத்துவ குணம் உள்ளதாம் . அதற்கு தடை இல்லையாம் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory