» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பங்குச்சந்தைகளில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் : சென்செக்ஸ் ஒரே நாளில் 2000 புள்ளி உயர்வு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 3:36:48 PM (IST)

தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்து சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இன்று காலையிலும் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அதன்பின்னர், உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்ததையடுத்து, பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. 

வரிச்சலுகை அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த, பங்குகள் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 460 புள்ளிக்கு மேல் உயர்ந்தது. அதன்பின்னரும் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் சென்றது.மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 38 ஆயிரத்து 119 புள்ளிகளுடனும், நிப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 314 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்றது. இதன்மூலம் இந்திய பங்குச்சந்தைகளில், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory