» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் மீது வழக்குப்பதிவு: தேவாலயப் பணியிலிருந்து நீக்கம்!

சனி 21, செப்டம்பர் 2019 4:28:57 PM (IST)

கேரளாவில் ஜெபவேளையில் 3 சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க  தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜெப வேளையில் மூன்று சிறுமிகள் பாதிரியாரிடம் ஆசி பெற அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடம் பாதிரியார் வரம்பு மீறி சி்ல்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியர்களிடம் நடந்ததை கூறியதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மூன்று சிறுமிகளிடமும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் பாதிரியார் தலைமறைவாகி விட்டார். தேவாலயப் பணியிலிருந்து பாதிரியாரை இடைநீக்கம் செய்திருப்பதுடன், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு எர்ணாகுளம்-அங்கமாலி கத்தோலிக்க மறைமாவட்டம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

இவன்Sep 22, 2019 - 01:29:24 PM | Posted IP 162.1*****

மலையாளி என்ன வேண்டுமானாலும் செய்வான் ...

சிவா கத்தார்Sep 22, 2019 - 11:50:22 AM | Posted IP 162.1*****

முதல்ல இவருக்கு கல்யாணம் பண்ணிவைங்க கர்த்தரே ....அப்புறம் இவர் ஆசி வழங்கட்டும் .....எதுக்கு இவன் எல்லாம் கர்த்தர் பேரை சொல்லி இந்த உலகத்தில் இருக்கான் .....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory