» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜாகீர் நாயக்கை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் : அமலாக்கதுறை வேண்டுகோள்

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 12:52:17 PM (IST)

ஜாகீர் நாயக்கை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என அமலாக்கதுறை கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் மீது தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்தியாவில் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை பிடிக்க சரவதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது. இப்போது மலேசியாவில் இருக்கும் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக மத வெறுப்பை தூண்டியதாக அங்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் கீழ் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் திங்களன்று விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. மூடி முத்திரையிடப்பட்ட உறை ஒன்றில் துணை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்த கோரிக்கை மீதான விசாரணை செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும். கடந்த வாரம் நாயக்கிற்கு எதிராக அமலாக்கதுறை புதிய ஜாமீன் பெற முடியாத வாரண்டை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

அவர் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று அமலாகத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமலாக்கத்துறை இதுவரை ரூ.50.49 கோடி மதிப்புள்ள நாயக்கின் சொத்துக்களை இணைத்துள்ளது. பாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ், எங்ரேசியா (புனே) மற்றும் மும்பை பாண்டூப்பில் ஒரு திட்டத்தில் சொத்துக்களை வாங்க நாயக் ரூ.17.65 கோடி செலவிட்டுள்ளார் என அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory