» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 4:06:19 PM (IST)

தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வருமானத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் மனைவி நாவல் சிங்காலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

நாவல் சிங்காலுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், அவர் பல நிறுவனங்களில் சுயாதீன இயக்குநராக சம்பாதித்த வருமானத்துடன் தொடர்புடையது. இருப்பினும், இது ஒரு வழக்கமான விஷயம் தான் என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பணம் எவ்வளவு என்று அதிகாரி குறிப்பிடவில்லை. சிங்கால் ஒரு முன்னாள் வங்கியாளர் ஆவார், 2005 ஆம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory