» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு விற்பனை: அரவிந்த் கேஜ்ரிவால் உறுதி

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 4:23:22 PM (IST)

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் 1 கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய டெல்லியில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உறுதிபட கூறியுள்ளார்.
பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், வெங்காயத்தின் திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் 1 கிலோ வெங்காயம் ரூ. 80 ஆகவும், மும்பையில் 1 கிலோ வெங்காயம் ரூ.70 ஆகவும்,கொல்கத்தாவில் 1 கிலோ வெங்காயம் ரூ.50 ஆகவும், சென்னையில் 1 கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்புவரை 1 கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், நாடுமுழுவதும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க டில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லி அரசு சார்பில் மொபைல் வேன்கள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும். 1 கிலோ வெங்காயம் 24 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும். வெங்காயம் கொள்முதல் செய்யவும், வாகனம் மூலம் விற்பனை செய்யவும் டெண்டர் விடப்பட்டுள்ளது என்று டில்லி முதலமைச்சர்் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory