» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் நரேந்திர மோடிக்கு கௌரவம் வழங்கப்பட்டது : சசி தரூர்

புதன் 25, செப்டம்பர் 2019 10:28:36 AM (IST)

"அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம் அவருக்கானது அல்ல; இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் கொடுக்கப்பட்டது"என்று சசி தரூர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி கடந்த 1954-ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த போது பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறி வெளியிடப்பட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், அந்த புகைப்படம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை விமர்சித்து சசி தரூர், நேருவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். நேரு-இந்திரா காந்தி 1954-ஆம் ஆண்டு அமெரிக்க சென்றிருந்தபோதும் அவருக்கு  மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்திரா காந்தியின் பெயரை "இந்தியா காந்தி என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த சுட்டுரைப் பதிவு சமூக வலைதளங்களிலும் அவரை பின்தொடர்வோர் மத்தியிலும் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.

 சுட்டுரைப் பதிவின் தவறு சுட்டிக் காட்டப்பட்டதையடுத்து, அந்தப் புகைப்படம் நேரு அதே ஆண்டில் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது என்பதை சசி தரூர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், அந்தப் புகைப்படத்தில் தான் வெளியிட்டிருந்த செய்தியில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துள்ளார். "முன்பு பிரதமர்களாக இருந்தவர்களும் வெளிநாடுகளில் இதே அளவுக்கு பிரபலமடைந்துள்ளனர். நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம் அவருக்கானது அல்ல; இந்தியாவின் பிரதமர் என்ற வகையில் கொடுக்கப்பட்டது. அது இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்று சுட்டுரைப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory