» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு!!

புதன் 25, செப்டம்பர் 2019 12:45:07 PM (IST)

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டு தோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை,  கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை என ஆந்திர அரசு தெரிவித்திருந்தது.

தற்போது கண்டலேறு அணையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கண அடி வீதம் கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இன்று மாலை 2000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், ஆந்திர அரசிடம் 8 டிஎம்சி தண்ணீர் தரக்கோரிய நிலையில் ஆந்திரா அரசு 5 டிஎம்சி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இன்று திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர், 5 நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டுக்கு வந்து சேரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory