» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சின்மயானந்த் மீது பாலியல் புகார்: ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக சட்டக் கல்லூரி மாணவி கைது

புதன் 25, செப்டம்பர் 2019 3:50:27 PM (IST)சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி, வீடியோ ஆதாரங்களை அழிக்க ரூ.5கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர் சுவாமி சின்மயானந்தா. முன்னாள் மத்திய மந்திரியான இவர் மீது ஷாஜன்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கூறினார். சின்மயானந்தா கல்லூரியில் படித்த தன்னை சாமியார் தவறாக வீடியோ எடுத்து கடந்த 1 ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து மாணவியும், அவரது தந்தையும் கொடுத்த வீடியோ அடிப்படையில் சாமியார் சின்மயானந்தாவை சிறப்பு பாதுகாப்பு குழுவினர் கைது செய்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

இதற்கிடையே சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய சட்டக்கல்லூரி மாணவி மீது பணப்பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. சின்மயானந்தா மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக ரூ.5 கோடி கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மாணவி ஷாஜன்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள  நிலையில் சின்மயானந்தா  மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி இன்று காலை 9.15 மணி அளவில் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். 

சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஷாஜகான்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினித்குமார் முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். சின்மயானந்தா மீது புகார் கூறிய மாணவியை போலீசார் பலவந்ததாக இழுத்து சென்றதாகவும், அவரை கைது செய்யும்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory