» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்: சித்தப்பா மகன்கள் உள்பட 3பேருக்கு வலை

புதன் 25, செப்டம்பர் 2019 4:23:53 PM (IST)

சித்தூர் அருகே சிறுமியை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சித்தப்பா மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், புங்கனூர் ஜெட்டிக்குன்டலப் பள்ளியை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமி. அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சென்ரமாகுலப்பள்ளியை சேர்ந்தவர்கள் ஸ்ரீஹரி, ராஜூ. 2 பேரும் சிறுமிக்கு சித்தப்பா மகன்கள் உறவின் முறையாவார்கள். சம்பவத்தன்று இருவரும், அருண் என்பவருடன் சேர்ந்து ஒரு காரில் ஜெட்டிக்குன்டலப்பள்ளிக்கு வந்தனர். 

வழியில் சிறுமியின் தாயாருக்கு அவர்கள் போன் செய்து சிறுமி எங்கு இருக்கிறார்? என்ற விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். அவர்கள் மூவரும் நேராக காரில் சிறுமி இருக்கும் இடத்துக்கு சென்றனர். சம்பவ இடத்தில் இருந்து சிறுமியை 3 பேரும் கட்டாயப்படுத்தி காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். கிராம எல்லைக்கு அருகே ஓரிடத்துக்கு அழைத்து சென்று சிறுமியை 3 பேரும் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அவமானமாகக் கருதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு விசாரித்தனர். அவர்களிடம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் விட்டு கதறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி புங்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீஹரி, ராஜூ, அருண் ஆகியோரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory